காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்யும் தெலுங்கானா அதிகாரிகள் குழு.! - Seithipunal
Seithipunal


காலை உணவுத் திட்டத்தை ஆய்வு செய்யும் தெலுங்கானா அதிகாரிகள் குழு.!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. 

இந்த திட்டம் கடந்த 25-ந்தேதி முதல் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் 31,008 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்தக் காலை உணவு திட்டத்தால் சுமார் 18 லட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர் . 

இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்ட செயல்பாடுகளை தெலுங்கானா மாநில முதலமைச்சரின் செயலாளர் ஸ்மிதா சபர்வால், பழங்குடியின நலத்துறை அரசு செயலாளர் உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஆய்வு செய்கிறது.

பள்ளிகளில் உணவு தயாரிக்கும் முறை, அதனை பள்ளிக்கு கொண்டு செல்லும் முறை மற்றும் மாணவர்களுக்கு உணவு பரிமாறப்படும் விதம் என்று அனைத்தையும் அதிகாரிகள் நேரில் பார்வையிடுகின்றனர். 

அதன் படி, சென்னை ராயபுரத்தில் ஜிசிசி பழைய பள்ளி கட்டடத்தில் உணவு தயாரிக்கும் முறையை பார்வையிட்ட அதிகாரிகள், ராயபுரத்தில் உள்ள மாநகராட்சி உருது தொடக்கப் பள்ளிக்கு சென்று உணவு பரிமாறப்படுவதை ஆய்வு செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

telungana officers visit morning food scheme in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->