லட்சுமியை போலவே..? கோவில் யானைகளின் அழுகுரல் யாருக்காவது கேட்குமா.?!  - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற மனக்குல விநாயகர் கோயிலில் உள்ள யானை லட்சுமி இன்று அதிகாலை பாகன் நடைப்பயிற்சி அளித்துள்ளார் அப்போது திடீரென மயங்கி விழுந்த யானை உயிரிழந்தது.

கடந்த 1997 ஆம் ஆண்டு மணக்குள விநாயகர் கோயிலுக்கு தனியார் நிறுவனம் ஒன்று இந்த யானையை காணிக்கையாக வழங்கியது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் மணக்குள விநாயகர் கோயிலில் யானை லட்சுமி ஆசி வழங்கி வந்தது.

பக்தர்களிடம் ஆசி வழங்கி அன்பாக பழகி வந்த யானை உயிரிழந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் அப்பகுதி பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மணக்குள விநாயகர் கோவிலில் இருந்த யானை லட்சுமிக்கு சர்க்கரை நோயினால் தான் உயிர் இழப்பு ஏற்பட்டது. இதுபோலவே நெல்லையப்பர் கோவிலில் இருக்கும் யானைக்கும் சர்க்கரை இருக்கிறது. ஒரு நாளைக்கு யானை 80 கிலோமீட்டர் நடக்கும் பழக்கம் கொண்டது. 

யானையின் ஆரோக்கியத்தை காப்பாற்ற அவைகளை கோவிலில் கட்டி வைப்பதை நிறுத்த வேண்டும். கோவில் யானைகள் கட்டி வைக்கப்பட்டு தினசரி உணவாக அவற்றிற்கு சாதம் கொடுக்கப்படுகிறது. எனவே, தான் சர்க்கரை நோய் ஏற்படுகிறது. இதற்கு அரசும் பக்தர்களும் ஏதாவது முடிவு கட்டுவார்களா என்பது சமூக ஆர்வலர்களின் கேள்வியாக இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temple elephants affect by sugar


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->