பண்டிகை நாட்கள் எதிரொலி - போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஊழியர்கள் நியமனம்.! - Seithipunal
Seithipunal


ஆயுதபூஜை, விஜயதசமி மற்றும் தீபாவளி என்று தொடர்ந்து பண்டிகை வருவதால் வெளியூரிகளில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு வருகை தருகின்றனர். அவர்கள் சிரமம் இல்லாமல் பயணம் செய்ய கூடுதல் பேருந்துகளும் தற்காலிகமாக பணியாளர்களையும் நியமிக்க போக்குவரத்துக்கு கழகங்கள் முடிவெடுத்துள்ளது.

அதாவது, தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் ஓட்டுனர்கள், நடத்துனர்கள், மெக்கானிக்கல் பிரிவு என்று மொத்தம் 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக நிரந்தர காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதனால், ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பிரிவில், 30 சதவீதம் வரை பற்றாக்குறை உள்ளது.

இந்த நிலையில், ஆயுத பூஜை, தீபாவளி, பொங்கல் என்று அடுத்தடுத்து பண்டிகைகள் வரவுள்ளதால், வழக்கத்தை விட கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கவும், தற்காலிகமாக பணியாளர்களை நியமிக்கவும், அரசு போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன.

இது குறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:- "பயணியருக்கு பாதிப்பின்றி பேருந்துகள் இயக்க, நிர்வாகம் போதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர் பற்றாக்குறைக்கு உடனடி தீர்வு காணும் வகையில், தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்து, பயணியருக்கு பாதிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்க உள்ளோம்.

ஒவ்வொரு போக்குவரத்து கழகத்திலும், தலா 1,600க்கும் மேற்பட்ட தற்காலிக பணியாளர்களை நியமனம் செய்ய உள்ளோம். நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்யும் போது, தற்காலிக பணியாளர்கள் படிப்படியாக நீக்கப்படுவர்" என்றுத் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temporary staffs appointed transport department in tamilnadu for festival days


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->