தமிழகத்தில் காலிப்பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்ப அரசாணை வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்க கல்வி துறையின் கீழ் உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என்று மொத்தம் 14 ஆயிரத்து 19 காலிப்பணியிடங்கள் உள்ளன. 

இதனை நேரடி நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை மாணவ - மாணவிகளின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு, பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியரை நியமனம் செய்வது தொடர்பாக சமீபத்தில் கல்வித்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

அந்த உத்தரவின் படி, தற்காலிகமாக நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரமும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.15 ஆயிரமும், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.18 ஆயிரமும் தொகுப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், நேற்று பள்ளி பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மேலாண்மை குழு மூலம் காலியாக உள்ள 14 ஆயிரத்து 19 காலிப் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு அனுமதி அளித்தும், ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்குவதற்காக ரூ.109 கோடியே 91 லட்சத்து 52 ஆயிரம் நிதிக்கு ஒப்பளிப்பு செய்தும் அரசாணை பிறப்பித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

temporary teachers appointment to vacancis place in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->