வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்த கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதியுதவி! முதலமைச்சர்.! - Seithipunal
Seithipunal


ஆக்கிரமிப்பு வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்துள்ள கண்ணையன் குடும்பத்திற்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் இளங்கோ தெருவில் 259 வீடுகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது. இந்த நிலமானது கால்வாய்க்கு அருகிலும், நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக ராஜூ ராய் என்பவர் கடந்த 2008ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார்.

இந்த வழக்கானது பல்வேறு விசாரணைக்கு பிறகு ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அப்புறப்படுத்த பொதுப்பணித் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவையடுத்து இளங்கோ தெருவில் அரசு நிலத்தில் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இளங்கோ தெரு மக்கள் இரண்டு வாரங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தில் அப்பகுதியை சேர்ந்த பாமக பிரமுகர் கண்ணையன் என்பவர் திடீரென்று தீக்குளித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்து, சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்த கண்ணையன் மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.

இதையடுத்து வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்து இறந்த கண்ணையன் குடும்பத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ten lakhs financial assistance to kannaiyan family


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->