தமிழக காங்கிரஸ் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி! கே.எஸ்.அழகிரி.! - Seithipunal
Seithipunal


தமிழக காங்கிரஸ் சார்பில் இலங்கை மக்களுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி உதவி அளிப்பதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் எரி பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, அவற்றின் விலையும் விண்ணைத்தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். 

இதை அடுத்து இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில் திமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகள் நிதி வழங்குவதாக அறிவித்திருந்த நிலையில், இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூபாய் 10 லட்சம் நிதி உதவி வழங்குவதாக கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ten lakhs financial assistance to the people of srilanka on behalf of the tn congress


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->