தஞ்சை : பத்துமாதக் குழந்தைக்கு தடுப்பூசி - அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்.!! - Seithipunal
Seithipunal


தஞ்சை : பத்துமாதக் குழந்தைக்கு தடுப்பூசி - அடுத்த நொடியே நேர்ந்த கொடூரம்.!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மடிகை பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - கீதா தம்பதியர். இவர்களுக்கு தரணிகா என்ற பத்து மாத பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு பத்து மாத தடுப்பூசி போட வேண்டும் என்று துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து தொலைபேசி மூலம் பெற்றோர்களை அழைத்துள்ளனர். 

அதன் படி கீதா இன்று காலை குழந்தையை தூக்கிக் கொண்டு துறையூர் அங்கன்வாடி மையத்திற்குச் சென்று தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட சில நொடிகளிலேயே குழந்தைக்கு ஒவ்வாமை ஏற்பட்டு சுயநினைவு இழந்துள்ளது.

அங்கிருந்தவர்கள் உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தைக்கு மேலும் நான்கு ஊசியை செலுத்தியுள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. 

இதையடுத்து மருத்துவர்கள் குழந்தையையும் பெற்றோரையும் தஞ்சை அரசு இராசமிராசுதார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். அங்கு, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ten month baby died after vaccine in thanjavur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->