தொடரும் அட்டூழியம் - தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.!
ten tamilnadu fishermans arrest
மீன்பிடித் தடைக்காலம் முடிந்து மீனவர்கள் கடந்த சில நாட்களாகத்தான் கடலுக்குச் சென்று வருகின்றனர். ஆனால், அவர்களில் சிலரை இலங்கை கடற்படையினர் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து வருகின்றனர்.
அந்த வகையில், நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை இன்று கைது செய்துள்ளது. மேலும் ஒரு விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ளது. கைது செய்யப்பட்ட 10 பேரும் காங்கேசன் துறை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
ஏற்கனவே 37 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ள நிலையில் மேலும் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
ten tamilnadu fishermans arrest