சாத்தூரில் இன்று காலை பயங்கர வெடி விபத்து!....தொழிலாளர்கள் நிலைமை என்ன ஆச்சு தெரியுமா?
Terrible explosion in sathur this morning do you know what is the situation of the workers
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அடுத்த முத்தல்நாயக்கன்பட்டியில் இயங்கி வரும் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று காலை எதிர்பாராத விதமாக திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தால் ஏற்பட்ட அதிர்வு முத்தல்நாயக்கன்பட்டியில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட கிலோ மீட்டர் வரையிலான தொலைவு வரை உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சாத்தூர் மற்றும் சிவகாசி தீயணைப்புத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த வெடி விபத்து அதிகாலை நேரத்தில் ஏற்பட்டதால், பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
இருந்த போதிலும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள், பட்டாசு ஆலைக்குள் யாரேனும் இருக்கிறார்களா என்று சோதனை மேற்கொண்டு உள்ளனர். மேலும் இந்த வெடிவிபத்திற்கான கரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 19-ம் தேதி சாத்தூர் அருகே பாலமுருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Terrible explosion in sathur this morning do you know what is the situation of the workers