#சென்னை | விடியல் ஆட்சியில், விடியாத அரசு அதிகாரி - மக்களின் ரத்தத்தில் வந்த வரிப்பணம் பாழ்! - Seithipunal
Seithipunal


தாம்பரம் மாநகராட்சி : குரோம்பேட்டை 36-வது வார்டு புருஷோத்தமன் நகர் பகுதியில், மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்த மழை நீரை வெளியேற்றாமல், அப்படியே கான்கிரீட் கொட்டப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

இது குறித்த காணொளியை அந்த பகுதி வாசிகள் சமூக வலைதளங்களில் வெளியிட்டு, அரசு அதிகாரிகளின் அலட்சியத்தை அம்பலப்படுத்தினர். 

இந்த காணொளியில், முழங்கால் அளவுக்கு தேங்கிய மழை நீரில், கிட்டத்தட்ட 10 பணியாளர்கள் காங்கிரட் கலவை கலந்து கொண்டு வந்து கொட்டுகின்றனர். 

மேலும் காங்கிரட் செட் ஆகிவிட்டது என்பது போல, சுவர் எழுப்புவதற்கு உண்டான பலகைகளையும் அவர்கள் நடத்தொடங்கினர். இது அனைத்துமே இந்த காணொளியில் பதிவாகியுள்ளது.

இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானதால், தரமற்ற முறையில் நடைபெற்ற இந்த பணிகளை கண்காணிக்க தவறிய இளநிலை போதி பொறியாளர் வெங்கடேசன் என்பவரை பணியிட நீக்கம் செய்து, தாம்பரம் மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thambaram worst rain drainage work


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->