தஞ்சை அருகே இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை - Seithipunal
Seithipunal


தஞ்சை அருகே இளம் பெண் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையை அருகே ரோஜா என்ற இளம் பெண் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ராஜா என்பவரின் மனைவி தான் ரோஜா என்பது தெரியவந்துள்ளது.

மேலும், ரோஜாவை வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் ஆரோக்கியதாஸ் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


கலக்குளத்தில் மூழ்கி சகோதரிகள் உயிரிழப்பு:

புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூர் பகுதியில் கலக்குளத்தில் தண்ணீரில் மூழ்கி சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கலக்குளம் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த காயத்ரி (வயது 14), கவிஸ்ரீ (வயது 4) இருவரும் குளத்தின் குறுக்குப் பாதையில் நடந்து செல்லும் போது பள்ளத்தில் விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

இருவரையும் மீட்டு கீரனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjai Young lady brutal murder


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->