தஞ்சாவூர் : ஆடு மேய்த்த சிறுமிக்கு பாலியல் தொல்லை!...போக்சோவில் வாலிபர் கைது! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் அருகே, தோப்பில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பகுதி அருகே  உள்ள ஒரு தோப்பு ஒன்றில், 17 வயது சிறுமி ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருந்து உள்ளார். அப்போது அதே பகுதியை திருமேனி என்ற வாலிபர், தோப்பில் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுமியை நோட்டமிட்டுள்ளார்.

சுற்றி யாரும் இல்லாததை அறிந்த வாலிபர், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லப்படுகிறது. இதனால் அச்சமடைந்த சிறுமி அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக,  சிறுமி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாக தெரிகிறது.  அப்போது இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போக்சோ சட்டத்தில் திருமேனி மீது  வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை  கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thanjavur goat herding girl sexually harassed boy arrested in pocso


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->