பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்த தொழிலாளி.! போலீசார் விசாரணை - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் பூட்டிய வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த தொழிலாளி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் செங்கோடி வருக்கப்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர். இதில் தொழிலாளியான எட்வின் ஜெயக்குமார் (52) என்ற மகனுக்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் இவர் இலுப்பமூட்டில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இதையடுத்து எட்வின் ஜெயகுமார் தங்கி இருந்த வீட்டில் இருந்து நேற்று முன்தின இரவு துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து எட்வின் ஜெயக்குமாரின் சகோதரர் ராபின்சனிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து அவர் வீட்டின் கதவை உள்ளே திறந்து பார்த்தபோது எட்வின் ஜெயக்குமார் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். இதை அடுத்து இந்த சம்பவம் குறித்து திருவட்டார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The dead body of the worker in the locked house in kanniyakumari


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->