மனைவி மீது ஆத்திரம்: மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற கணவர்.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் மனைவி மீது மோட்டார் சைக்கிளை ஏற்றி கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விட்டிலாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஓட்டுநர் சந்திரமோகன் (39). இவரது மனைவி ராதா(35). இவர்களுக்கு எட்டு வயதில் ஒரு மகனும், ஆறு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி பிரிந்து தற்பொழுது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இதனால் மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சந்திரமோகன் நேற்று ராதா நடந்து சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் வந்த அவர் மனைவி மீது மோட்டார் சைக்கிளை ஏற்றியுள்ளார். இதில் ராதா பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து உறவினர்கள் ராதாவை மீட்டு சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த நாலாட்டின்புதூர் போலீசார், சந்திரமோகனை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The husband tried to kill his wife by riding a motorcycle in Thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->