ஆத்திரமடைந்த கணவர்.! கள்ளக்காதலனை அறிவாள்மனையால் வெட்டிய பரபரப்பு சம்பவம்.!
The husband who cut the wife illegal boyfriend in erode
ஈரோடு மாவட்டத்தில் மனைவியின் கள்ளக்காதலனை அரிவாள்மனையால் கணவர் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலம் கோவிலூர் பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சிலம்பரசன் (37). இவரது மனைவி நல்லம்மாள் (35). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சிலம்பரசனும், நல்லம்மாளும் கடந்து 9 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இந்நிலையில் காலிங்கராயன் பாளையம் பகுதியை சேர்ந்த விஜயதேவன்(32) என்பவருக்கும், நல்லம்மாளுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இரண்டு பேரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தார்கள்.
இதையடுத்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விஜயதேவனுக்கும், நல்லமளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், நல்லம்மாள், விஜயதேவனை பிரிந்து கணவர் சிலம்பரசனுடன் வசித்து வந்தார்.
ஆனால் விஜயதேவன் தன்னுடன் வருமாறு நல்ல மாலை தொந்தரவு செய்துள்ளார். இதனால் சம்பவத்தன்று சிலம்பரசன் மற்றும் அவரது உறவினர்கள் விஜயதேவனையே அழைத்து இதுகுறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்பொழுது இவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த சிலம்பரசன் வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து விஜய தேவனை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் சிலம்பரசனின் உறவினர்கள் மூன்று பேரும் இரும்பு கம்பியால் விஜய தேவனை தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த விஜயதேவன் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, சிலம்பரசனை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள சிலம்பரசனின் உறவினர்கள் மூன்று பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
The husband who cut the wife illegal boyfriend in erode