மர்மமான முறையில் நர்சு மரணம்.! போலீசார் தீவிர விசாரணை.!
The nurse died mysteriously at home in kanniyakumari
கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டிற்குள் மர்மமான முறையில் நர்சு உயிரிழந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுக்காட்டு விளைப் பகுதியை சேர்ந்தவர் சஞ்சய் குமார். இவருடைய மனைவி ரஜினிகாந்தி(34). இவர் நர்சாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கணவருடன் மும்பையில் வசித்து வந்த ரஜினிகாந்தி வெளிநாட்டில் பணி புரியவதற்காக பாஸ்போர்ட் எடுக்க சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
இதையடுத்து நேற்று இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டு விட்டு அறைக்கு தூங்கச் சென்ற ரஜினிகாந்தி நீண்ட நேரமாகியும் காலை எழுந்து வரவில்லை. இதனால் ரஜினிகாந்தின் சகோதரர் ஜெயசீலன் அறைக்கு சென்று பார்த்த போது ரஜினிகாந்தின் இறந்து கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் ஜெயசீலன், இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ரஜினிகாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ரஜினிகாந்தி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
The nurse died mysteriously at home in kanniyakumari