திருவாரூர் அருகே மாணவனின் உயிரை காப்பாற்றிய வெள்ளை உடை தேவதை... ! - Seithipunal
Seithipunal


சாலையில் உயிருக்கு போராடிய மாணவரின் உயிரை காப்பாற்றிய செவிலியரை பலர் பாராட்டி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் , மன்னார்குடி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று அவரின் உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பி கொண்டிருந்த போது மன்னார்குடி பகுதியில் வந்து கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

இதனை கண்ட வனஜா அவரை இளைஞரை பரிசோதித்தார். அப்போது அம்ந்த இளைஞரின் நாடித்துடிப்பு ஆபத்தான நிலைக்கு சென்ற நிலையில் அவர் உடனே சி.பி.ஆர்  சிகிச்சை அளித்தார்.  அந்த இளைஞரின் இதயத்துடிப்பு சீராகவே அவரை  ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்குள்ளானவர் மன்னார்குடி அடுத்த கருவாகுறிச்சியை சேர்ந்த வசந்த் என்பவரும்  அங்குள்ள பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வருவதும் தெரியவந்தது. மேலும், அந்த மானவன் ஆபத்தான நிலையில் இருந்து மீண்ட பிறகே செவிலியர் வனஜா அங்கிருந்து சென்றுள்ளார். செவிலியருக்கு பலதரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The nurse who rescued the student who was involved in a road accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->