மக்களே உஷார்! கரண்ட் பில் செலுத்தவில்லை செய்தி! லிங்க் தொட்ட பணம் அபேஸ்! - Seithipunal
Seithipunal


ஆன்லைன் மூலம் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற மோசடிகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஆன்லைனில் பல்வேறு மோசடி சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்தநிலையில் சென்னை ராமாபுரத்தில் சத்தியசீலன் என்பவர் வசித்து வருகிறார். சென்னையில் உள்ள தனியார்  நிறுவனத்தில் மென்பொருளாளராக பணியாற்றி வருகிறார். இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பி உள்ளார்.

அப்போது இவரது செல்போனுக்கு  குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில் கூறி இருப்பதாவது,மின் கட்டணம் செலுத்தவில்லை என்று வந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியசீலன் மின் கட்டடத்தை செலுத்தி விட்டோமே? ஏன் இப்படி வருகிறது என்று அந்த லிங்கை தொட்டதாக கூறப்படுகிறது.

சத்தியசீலன் அந்த லிங் உள் சென்ற சில நொடிகளில் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.9000 எடுக்கப்பட்டதாக சத்தியசீலின் மொபைலுக்கு செய்தி வந்துள்ளது.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சத்தியசீலன் மோசடியில் சிக்கியதை அறிந்து இரு தொடர்பாக சைபர் கிரைம்  போலீசாரில் சத்தியசீலன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் மோசடியில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The police are looking for the mysterious people involved in online fraud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->