எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்ற 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம் கடின பயிற்சி இல்லாதது-போலீசார் தகவல்..!
The reason 127 candidates cleared written test failed in the physical fitness test was lack of hard training
தமிழக காவல்துறையில் புதிதாக சேர்க்கவுள்ள 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணிகளுக்கான எழுத்து தேர்வு நடத்தப்பட்டதில் வெற்றி பெற்ற 413 பெண்களுக்கான உடற்தகுதி தேர்வு சேலம் மாவட்டம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.
கடந்த 23-ந்தேதி தேர்வர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு உயரம் அளவீடு செய்து 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டதன் முடிவில், முதல் நாளில் 284 பெண்கள் கலந்து கொண்டதில் 248 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, நேற்று முன்தினம் 2-ம் கட்ட தேர்வு நடத்தப்பட உள்ள நிலையில், தேர்வில் கலந்து கொள்வதற்கு 171 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்தத்தேர்வில் 168 பெண்கள் மட்டும் கலந்து கொண்டனர். இதில் 41 பேர் மட்டும் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 127 பேர் தேர்ச்சி பெறவில்லை.
எழுத்துதேர்வில் தேர்ச்சி பெற்று 127 பேர் உடற்தகுதி தேர்வில் தோல்வி அடைந்ததற்கான காரணம், உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற பெண்கள் தேர்வுக்கு முன்பு கடின பயற்சி செய்திருந்தால் எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
English Summary
The reason 127 candidates cleared written test failed in the physical fitness test was lack of hard training