சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள விளையாட்டுத்துறை அதிகாரி, முன்னாள் அமைச்சரால் பறிபோன வேலை !! - Seithipunal
Seithipunal


மாவட்ட தடகளப் போட்டி நடைபெற்ற போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள், அண்ணா விளையாட்டரங்கில் பேனர்கள் வைத்துள்ளனர் இந்த சம்பவத்தை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டியதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன் மாவட்ட நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருச்சி மாவட்டம் அண்ணா விளையாட்டரங்கில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான மாநில அளவிலான தடகளப் போட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.

இதில் முன்னாள் அதிமுக சுகாதார அமைச்சர் நடத்தும் சிவிபி ஸ்போர்ட்ஸ் அகாடமியைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, முன்னாள் எம்எல்ஏ வருகைகாக, அவரது ஆதரவாளர்கள் மைதானத்தில் அமைச்சரின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளை மற்றும் பேனர் வைத்தனர். இதை கண்டும்காணாமல் அலட்சியமாக இருந்தார் மாவட்ட விளையாட்டு அலுவலர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது, அந்த குழுவின் அறிக்கையின் படி இறுதி முடிவு எடுக்கப்படும் என விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

SDAT விளையாட்டு விடுதி காப்பாளராக இருந்த கண்ணன், தற்போது மாவட்ட விளையாட்டு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கேள்வி கேட்டபோது , ​​“விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவே வந்தேன், அரசியல் உள்நோக்கம் கொண்டது அல்ல” என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The suspended sports officer lost his job to the former minister


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->