கொடூரத்தின் உச்சம்! 3வதும் பெண் குழந்தை! ஆத்திரத்தில் கத்திரிக்கோலால் குத்தி கொன்ற கொடூர தந்தை! - Seithipunal
Seithipunal


மூன்றாவதும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் பிறந்து 9 நாளான பச்சிளம் குழந்தையை தந்தை கத்திரிக்கோலால் குத்திக் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

சென்னை வியாசர்பாடி சுந்தரம் 4 தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி விஜயலட்சுமி அவர்களது இருவருக்கும் ஏற்கனவே 5 மற்றும் 3 வயதில் இரண்டு பெண் குழந்தை உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவருக்கும் கடந்த 7 தேதி பச்சிளம் குழந்தை பெண் குழந்தை பிறந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், குழந்தையின் வயிற்றில் 3 இடங்களில் ஆயுதத்தால் குத்திய ரத்தக்காயம் இருந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிகிச்சை பெற்றுவந்த சிகிச்சை பலனின்றி கடந்த ஒன்பதாம் தேதி குழந்தை பரிதாபமாக உயிரிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை நடத்தினர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைட்டனர். இந்த நிலையில் குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூர்மையான ஆயுதத்தால் பச்சிளம் குழந்தையின் வயிற்றில் மூன்று இடங்களில் கத்தியதால் குழந்தை இறந்து போனது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வியாசர்பாடி போலீசார் குழந்தையின் தந்தை ராஜ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஏற்கனவே இரண்டு மகள்கள் உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் குழந்தையை கத்திரிக்கோலால் குத்திக் கொன்றேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு ராஜ்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஏற்கனவே இரண்டு பெண் குழந்தை உள்ள நிலையில் மூன்றாவது பெண் குழந்தை பிறந்ததால் ஆத்திரத்தில் தந்தை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The third was the father who killed the baby girl in a fit of rage


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->