ஈரோட்டில் நிகழ்ந்த சோகம்!...பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பால் பலி! - Seithipunal
Seithipunal


ஈரோடு அருகே பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம்,  பர்கூர் மலைப்பகுதியில் உள்ள சுண்டப்பூர் மலை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், இடைநிலை ஆசிரியராக அந்தோணி  என்பவர் பணியாற்றி வந்த நிலையில், இவர் வழக்கம்போல் நேற்று பள்ளியில் மாணவர்களிடையே பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.

மதிய உணவு அருந்திவிட்டு வகுப்புக்கு சென்று மாணவர்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அவர் மயங்கி விழுந்ததை அடுத்து சக ஆசிரியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பள்ளிக்கு விரைந்த மருத்துவ ஊழியர்கள் அவரை பரிசோதனை செய்ததில், அவர்  ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவலல் அறிந்த பர்கூர் போலீசார் ஆசிரியரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேலும் இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The tragedy that happened in erode the teacher who was teaching died of a heart attack


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->