டங்ஸ்டன் சுரங்கம் விவகாரம்..பொய் தகவல்களை பரப்பி ஏமாற்றும் தி.மு.க. செய்தது.. எல்.முருகன் காட்டம்!
The Tungsten Mine Affair DMK spreads false information Did L. Murugan Kattam
டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது என மத்திய மந்திரி எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 2-நாட்கள் நடைபெறும் சர்வதேச உளவியல் மாநாட்டை மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
பின்னர் மத்திய மந்திரி எல்.முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய அப்பகுதி கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தபோது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள், அம்பலக்காரர்கள், மத்திய கனிமவளத்துறை மந்திரி கிஷன்ரெட்டியை சந்தித்தனர் என்றும் அப்போது டங்ஸ்டன் சுரங்கம் வருவதால் அப்பகுதியில் ஏற்படக்கூடிய விவசாய பாதிப்பு பிற பாதிப்புகளை விளக்கி கூறினர் என தெரிவித்தார்.
மேலும் இதனடிப்படையில் பிரதமர் மோடியுடன் ஆலோசித்து, மத்திய மந்திரி கிஷன்ரெட்டி டங்ஸ்டன் சுரங்கத்துக்கான ஏலத்தை முழுமையாக ரத்து செய்துள்ளார் என்றும் இதற்காக மதுரை மேலூர் பகுதி மக்கள் சார்பிலும், தமிழக மக்கள் சார்பிலும் பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி கிஷன்ரெட்டிக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என கூறியுள்ள மத்திய மந்திரி எல்.முருகன்.சுரங்க விவகாரத்தில் தமிழக திமுக அரசு மக்களை ஏமாற்றக்கூடிய விளையாட்டு அரசியலை செய்தது என குற்றம்சாட்டினார்.
மேலும் 2017-ம் ஆண்டு முதல் சுரங்கம் அமைப்பதற்கான நடைமுறை பணிகள் நடந்து வருகிறது என்றும் இது கடந்த 2023-ம் ஆண்டு தீவிரப்படுத்தப்பட்டபோது பொய்யான தவறான தகவல்கள் மக்கள் மத்தியில் தி.மு.க. அரசு பரப்பி வந்தது என்றும் 2021-ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்தது முதல் இத்திட்டம் தொடர்பாக எந்த எதிர்ப்பையும் தமிழக அரசு பதிவு செய்யவில்லை என்றும் மக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்திய பிறகுதான் தாங்களும் எதிர்ப்பதாக தி.மு.க. அரசு காட்டிக்கொண்டது என கூறியுள்ளார்.
மேலும் பேசிய மத்திய மந்திரி எல்.முருகன்,பிரதமர் மோடி உலகம் முழுவதும் திருக்குறளை பரப்பி வருகிறார்என்றும் தேர்தல் அறிக்கையில் உலகம் முழுவதும் திருக்குறள் கலாச்சார மையம் அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார் அதன்படி ஆட்சி அமைந்து 4 மாதங்களில் 5 நாடுகளில் திருக்குறள் கலாச்சார மையத்தை உருவாக்கியுள்ளோம் என்று கூறினார்.மேலும் டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்த வேண்டும் என தமிழ் பற்றாளர்கள், சான்றாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர் என்றும் இதற்கான தேதியை விரைவில் அறிவித்து டெல்லியில் திருக்குறள் மாநாடு நடத்தப்படும் என்றும் இவ்வாறு மத்திய மந்திரி எல்.முருகன் அவர் கூறினார்.
English Summary
The Tungsten Mine Affair DMK spreads false information Did L. Murugan Kattam