வக்பு வாரியத்திற்கு தலைவரை நியமித்து செயல்படுத்த வேண்டும்..திமுக வலியுறுத்தல்!
The Wakf Board should be headed by a chairman. DMK insists!
புதுச்சேரி வக்பு வாரியத்திற்கு தலைவரை நியமித்து செயல்படுத்த வேண்டும் என திமுக சிறுபான்மையினர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக சிறுபான்மை அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் லப்போர்த் வீதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்திற்கு சிறுபான்மை அணி அமைப்பாளர் முஹம்மது ஹாலித் தலைமை வகித்தார். இதில் திமுக மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்.
கூட்டத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த மார்ச் 1–ஆம் தேதி சுல்தான்பேட்டை அரசுப் பள்ளியில் பயிலும் 200 மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல், புதுச்சேரி அரசு வேலைவாய்ப்புகளில் இஸ்லாமியர்களுக்கான இடஒதுக்கீடு 2 சதவீதம் தொடர்ந்து புறக்கணிப்பதை இக்கூட்டம் கண்டிப்பது, ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த மசோதாவை கண்டிப்பது, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை மீண்டும் வழங்க ஒன்றிய அரசை வலியுறுத்துவது, புதுச்சேரி வக்பு வாரியத்திற்கு தலைவரை நியமித்து வாரியம் சிறப்பாக செயல்பட புதுச்சேரி அரசை இக்கூட்டம் வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
English Summary
The Wakf Board should be headed by a chairman. DMK insists!