காதல் தம்பதிகளின் உயிரைக் குடித்த திருமண நாள்... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை அருகே செங்குன்றம் பகுதியைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு அவர்களது முதல் திருமண நாளே இறந்த நாளாகவும் அமைந்தது அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை அடுத்த துத்தூர் கிராமத்தைச் சேர்ந்த நிவேதிதா(19) பிளஸ் டூ வரை படித்திருந்த இவர் அம்ரித் குமார் என்ற இளைஞரை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு இருந்த நிலையிலும் சென்னை சென்று தனது காதலனை கரம் பிடித்தார்.

சென்னையில் அவரது காதல் கணவரான அம்பேத்குமார் டிடிஎச்  டிஷ் அமைக்கும் பணியில் இருந்தார். மேலும் நிவேதிதா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆம் தேதி அவர்களது முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக அம்பரித்குமாரின் சகோதரி மெர்சி. இவர்களது வீட்டிற்கு சென்று இருக்கிறார். அப்போது நிறைமாத கர்ப்பிணியான நிவேதிதா தூக்கில் சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறை தொடர்பு கொண்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிவேதிதாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில்  முதல் திருமண நாளை கொண்டாடுவதற்காக கணவர் அமிர்த்குமாரை வேலைக்குச் செல்லாமல் விடுப்பு எடுத்து தன்னுடன் இருக்குமாறு கேட்டு இருக்கிறார் நிவேதிதா. தற்போது கர்ப்பமாக இருப்பதால் வெளியே செல்ல வேண்டாம் குழந்தை பிறந்த பின் திருமண நாளை கொண்டாடிக் கொள்ளலாம் என கூறிவிட்டு அம்ரித் குமார் வேலைக்கு சென்று இருக்கிறார். இதனால் மனமுடைந்த நிவேதிதா  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு தொடர்பாக நிவேதிதாவின் சகோதரி கொடுத்துள்ள புகாரில் தனது தங்கையின் கணவர் மது அருந்தும் பழக்கம் கொண்டவர் என்றும்  அதனால் தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகமிருப்பதாகவும் காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை காவல்துறை விசாரித்து வருவதோடு திருமணமாகி ஒரு வருடத்தில் தற்கொலை செய்து கொண்டிருப்பதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கத்தில் விரக்தியிலிருந்த கணவர் அமிர்தகுமாரும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இன்று அதிகாலை அம்ரித் குமாரை பார்ப்பதற்காக அவரது நண்பர் வீட்டிற்கு சென்ற போது நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது அம்ரித்குமார் தூக்கில் சடலமாக தூங்குவதை பார்த்த நண்பர் அதிர்ச்சி அடைந்து காவல்துறையை தொடர்பு கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவிட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wedding day that consumed the life of the loving couple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->