கள்ளகாதலை கண்டித்த மனைவி! தூக்குபோட்டு தற்கொலை செய்த கணவர்! போலிசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள  வில்லிவாக்கம் ராஜாஜி நகர் ரத்தினம் தெருவை சேர்ந்தவர் பாலாஜி (38). அண்ணாநகரில் உள்ள கார் ஷோரூமில் இவர் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சந்தியா (30).  இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இவர்களுக்கு உள்ளது‌. 

இந்நிலையில்,கார் ஷோ ரூமில் வேலை பார்த்து வந்த பாலாஜி, அங்கு வேலை பார்த்து வரும் ஒரு பெண்ணிடம் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த தகாத உறவால் பாலாஜிக்கும் அவரது மனைவி சந்தியாவுக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக,  பாலாஜிக்கும் அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே நேற்று முன்தினம் வாய்த்தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த மனைவி வில்லிவாக்கத்தில் உள்ள தனது தாயார்  வீட்டுக்கு தனது குழந்தையை எடுத்து கொண்டு சென்றுவிட்டார். 

இதனை அடுத்து, மனைவி சந்தியா நேற்று காலை கணவருக்கு போன் செய்தபோது அவர் செல்போனை எடுக்கவில்லை. அவரை தொடர்ந்து தொடர்புகொண்ட போதும் பாலாஜி போனை எடுக்கவில்லை.

இந்நிலையில், மனைவி சந்தியா வீட்டிற்கு சென்று நேரில் பார்த்தபோது அவரது வீட்டின் ஹாலில் உள்ள மின்விசிறியில் கணவர் பாலாஜி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மனைவி சந்தியா சத்தம் போட்டுள்ளனர். அங்கு இருந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சந்தியாவுடன் சேர்ந்து பாலாஜியை மீட்டனர். ஆனால் அப்போது பாலாஜி இறந்துவிட்டார் என தெரியவந்தது. 

இது குறித்து  தகவல் அறிந்த ராஜாமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பாலாஜி உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife condemned fake love Husband who committed suicide Police investigation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->