ஒரு அளவில்லையா!...இன்னிக்கு இத்தனை ஊர்ல மின்தடையா?.....கொந்தளிக்கும் பொதுமக்கள்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த பணிகளில் மின்தடை ஏற்படும் என்பதனை தமிழ்நாடு மின்சார வாரியம் செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்றும், மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் விநியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தாம்பரத்தில் உள்ள ராஜகீழ்ப்பாக்கம் மாருதி நகர் பிரதான சாலை. ரங்கா காலனி பிரதான சாலை. நேதாஜி தெரு, ஐயப்பா நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். 

கோவையில் நஞ்சநாயக்கனூர்,  தென்சங்கம்பாளையம், கோட்டூர், கம்பாலப்பட்டி, அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், , டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய் உள்ளிட்ட  பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலையில் அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். 

இதேபோல் , பல்லடத்தில் கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய், தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.  

மேலும், திருச்சியில் கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும்,  கரூரில் உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி,  ஆகிய பகுதிகள் மற்றும்  கொடைக்கானல் நகரம், செண்பகனூர், பெருமாள்மலை, வில்பட்டி, பூம்பாறை, உள்ளிட்ட பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no level Is there a power outage in so many towns today The public is in turmoil


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->