தியாகத்துக்கு விலை இல்லை..பென்ஷனையும் வாங்க மறுத்த கிருஷ்ணசாமி நாயுடு..யார் இவர் தெரியுமா? - Seithipunal
Seithipunal


சுதந்திர போராட்ட வீரர் விருது வழங்கப்பட்டபோதும் கூட, தியாகத்துக்கு விலை இல்லை, என்று பென்ஷனையும் வாங்க மறுத்த உத்தம தலைவர் திரு.ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பிறந்ததினம் இன்று. 

விடுதலைப் போராட்ட வீரர் ரா.கிருஷ்ணசாமி நாயுடு 1902ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் புது.ராமச்சந்திரபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார்.இவர் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மகாசபையில் சேர்ந்தார். 1930ஆம் ஆண்டு சட்டமறுப்பு இயக்கம், 1940ஆம் ஆண்டு தனிநபர் சத்தியாக்கிரகம், 1942ஆம் ஆண்டு ஆகஸ்ட் இயக்கம் ஆகியவற்றில் கலந்துக் கொண்டு சிறைக்குச் சென்றுள்ளார்.

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968ஆம் ஆண்டு முதல் 1973ஆம் ஆண்டு வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும் உயர்ந்தார்.

 1959ஆம் ஆண்டு முதல் 1962ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராகவும், 1962ஆம் ஆண்டு முதல் 1967ஆம் ஆண்டு வரை அதன் தலைவராகவும் இருந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராகப் பதவி வகித்தார்.

நேர்மையான, எளிமையான, பண்பான அரசியல் தலைவராக தனது இறுதிமூச்சு வரை வாழ்ந்த இவர் தன்னுடைய 72வது வயதில் 1973 அக்டோபர் 30 ஆம் தேதி அன்று மறைந்தார்.சுதந்திர போராட்ட வீரர் விருது வழங்கப்பட்டபோதும் கூட, தியாகத்துக்கு விலை இல்லை, என்று பென்ஷனையும் வாங்க மறுத்த உத்தம தலைவர் திரு.ரா.கிருஷ்ணசாமி நாயுடு அவர்கள் பிறந்ததினம் இன்று !.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There is no price for sacrifice Krishnaswamy Naidu refuses to accept pension Do you know who he is


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->