திருச்செந்தூரில் யானை மிதித்து 2 பேர் உயிரிழப்பு - பரிகார பூஜைக்கு பிறகு கோவில் நடை திறப்பு.!
thiruchenthur temple gate open after pooja for two peoples died
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். இந்தக் கோவிலில் உள்ள தெய்வானை என்ற யானை மிதித்து யானை பாகன் உதயகுமார் மற்றும் பழம் கொடுக்க வந்த பக்தர் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவிலில் யானை மிதித்து இருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டது. பின்னர், கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டது. சுமார் 45 நிமிடங்கள் கோவில் நடை அடைக்கப்பட்டிருந்த நிலையில், பரிகார பூஜைக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.
இதற்கிடையே, கோவில் யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் மாவட்ட வன அலுவலர் ரேவதி ரமணன், காவல் துறையினர் ஆய்வு செய்ததுடன், யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளையும் மாவட்ட வன அலுவலர் ஆய்வு செய்து வருகின்றனர்.
English Summary
thiruchenthur temple gate open after pooja for two peoples died