வசமாக சிக்கிய திமுக எம்எல்ஏ! அவரையும் வழக்குல சேருங்க - உயர்நீதிமன்றம் அதிரடி! - Seithipunal
Seithipunal


நில அபகரிப்பு வழக்கில் திமுக எம்எல்ஏவையும் சேர்க்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நில அபகரிப்புக்கு உடந்தையாக செயல்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக எம்எல்ஏ நல்ல தம்பியையும் சேர்க்க வேண்டும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

திருப்பத்தூரை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பரபரப்பு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவரின் அந்த மனுவில், விஜயலட்சுமியின் நிலத்தின் அருகே இருந்த நிலத்தை வாங்கிய பொள்ளாச்சி சேர்ந்த பிரேமா என்பவர், விஜயலட்சுமி நிலத்திற்கும் சேர்த்து பட்டா கோரியுள்ளார். 

இதனை எதிர்த்து வட்டாட்சியரிடம் விஜயலட்சுமி அளித்த புகார், மாவட்ட வருவாய் அதிகாரிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே திருப்பத்தூர் திமுக எம்எல்ஏ நல்லதம்பி இந்த விவகாரத்தில் தலையிட்டுm விஜயலட்சுமியின் நிலத்தை பிரேமாவுக்கு சாதகமாக உத்தரவு வாங்கி கொடுத்துள்ளார். 

எனவே, தனது நிலத்தை மீட்டு ஒப்படைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று, விஜயலட்சுமி தனது மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். 

இந்த வழக்கை இங்கு விசாரணை செய்த நீதிபதி, இந்த வழக்கில் திமுக எம்எல்ஏ நல்லதம்பிக்கு எதிராக தீவிரமான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரையும் இந்த வழக்கில் எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரர் விஜயலட்சுமிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இந்த வழக்கு குறித்து தமிழக அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகின்ற செப்டம்பர் இரண்டாம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathur DMK MLA Landscam case Chennai HC


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->