சைன் போட முடியாது! எங்க வேனா புகார் கொடு! வைரல் வீடியோ! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டம், பொம்மிடிப்பூண்டி பகுதியில், ஆதார் திருத்த விண்ணப்பத்திற்கான சான்றிதழில் கையெழுத்திட மறுத்து, லஞ்சம் கொடுத்தால் கையெழுத்திடுவேன் என்று மருத்துவர் கூறிய காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

சம்மந்தப்பட்ட அந்த நபருக்கும் மருத்துவருக்கும் இடையே நடக்கும் கடும் வாக்குவாதம் குறித்த காணொளி தற்போது சமூகவலைத்தளங்களில்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த காணொளியில் மருத்துவர், இது என்னுடைய பணி கிடையாது. நான் உங்களுக்கு கையெழுத்து போடவும் முடியாது என்று கூறுகிறார்..

மேலும், எனக்கு நேரமில்லை. என்னால் கையெழுத்து போட முடியாது. நீ எங்கு வேண்டுமானாலும் புகார் அளித்துக் கொள் என்று அந்த மருத்துவர் தெரிவிக்கிறார்.

பாதிக்கப்பட்ட அந்த நபர் இந்த காணொளியை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டதால் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Aadhar Sign Issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->