அரசு வாகனத்தில் துணிக்கடைக்கு வந்த மேயர் குடும்பம்.! சாலையில் நிறுத்தி ஷாப்பிங்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூரில் அரசு வாகனத்தில் மேயரின் குடும்பம் ஷாப்பிங் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி மாநகராட்சிக்கு மேயராக இருந்து வரும் நபர் தான் உதயகுமார்..இந்த நிலையில் உதயகுமாரின் குடும்பத்தினர் திருவள்ளூரில் இருக்கும் ஒரு தனியார் துணிக்கடைக்கு சென்றுள்ளனர்.

அப்போது அவர்கள் துணி கடைக்கு ஷாப்பிங் போக மேயருக்கென அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ள வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்த வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு உள்ளே சென்று அவர்கள் ஷாப்பிங் செய்துள்ளனர்.இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசு வாகனங்களை குடும்பத்தினருக்கு கொடுத்து சொந்த பயன்பாட்டிற்கு பயன்படுத்துவது பெரும் மோசடி என்று இந்த கண்ட பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

THIRUVALLUR MAYOR FAMILY USING GOVT CAR FOR SHOPPING


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->