கஸ்டமர் கேருக்கு கால் செய்த பெண்.. சற்று நேரத்தில் நடந்த அதிர்ச்சி., உஷார்.! எச்சரிக்கும் போலிஸ்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தான் வாங்கிய பொருள் சரியில்லாத காரணத்தால் அது பற்றி புகாரளிக்க இணையதளம் மூலமாக கஸ்டமர் கேர் ஃபோன் நம்பரை தேடி எடுத்துள்ளார். அந்த எண் மூலம் தொடர்பு கொண்டு புகாரளித்துள்ளார்.

அப்போது எதிர் முனையில் பேசிய நபர் உங்களுடைய செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் என்றும், அதை கிளிக் செய்தால் உங்கள் புகார் பதிவு செய்து கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதை உண்மை என நம்பிய அந்தப் பெண்ணும் அவர் கூறியதைப் போல செல்போனுக்கு வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார்.

உடனடியாக அவருடைய வங்கி கணக்கில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் பறிபோனது. இது குறித்து அந்த பெண் சைபர் கிரைமில் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் குறித்து சைபர் கிரைம் போலீஸ் பேசியபோது," ஆன்லைன் மற்றும் கடைகளில் வாங்கிய பொருளாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ரசீதுகளில் இடம் பெற்றுள்ள கஸ்டமர் கேர் எண்களை மட்டும் தான் தொடர்பு கொண்டு பேச வேண்டும்.  

அப்படி எண்கள் கிடைக்கவில்லை என்றால் குறிப்பிட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இருந்து எண்களை எடுத்து தொடர்பு கொள்ளலாம். அதை விட்டுவிட்டு இணையத்தில் கிடைக்கும் ஏதாவது ஒரு நம்பரை தொடர்பு கொண்டு பேசினால் இப்படி ஏமாறக்கூடிய நிலை தான் ஏற்படும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்." என்று அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur women Cheated By customer Care


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->