திருவண்ணாமலை : தீபத்திருவிழாவில் ஏற்றப்படும் திரிக்கு சிறப்பு பூஜை.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் தீபத்திருவிழா திருவண்ணாமலை கோவிலில் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு தினமும் காலையில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் போன்ற பஞ்சமூர்த்திகள் தனித்தனி வாகனங்களில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் தருகின்றனர்.

இந்நிலையில், கார்த்திகை விழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான மகா தீபம் வருகிற 6-ந்தேதி மாலை திருவண்ணாமலை நகரின் மைய பகுதியில் உள்ள மலையின் உச்சியில் ஏற்றப்பட உள்ளது. இதற்கு முன்னதாக அன்று அதிகாலை நான்கு மணியளவில் அண்ணாமலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட உள்ளது. 

இந்தத் தீபத் திருவிழாவில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகாதீபத்திற்காக பயன்படுத்தப்படும் 1,150 மீட்டர் நீளமுள்ள தீபத்திரிக்கு சந்தனம், உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. 

மேலும், இந்த மகா தீபத்தை காண்பதற்கு இந்த ஆண்டு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் மூலம் செய்யப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thiruvannamalai karthigai deepam special pooja for deepam wick


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->