கனமழை : தூத்துக்குடியில் ரெயில்கள் ரத்து.!
thoothukudi trains cancelled for rain
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தொடங்கியதிலிருந்து தற்போது தீவிரமடைந்துள்ளது. அதிலும் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிலும் குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.
அந்த வகையில், தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதனால் தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது, இன்று மாலை 6.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து நெல்லை செல்லும் பயணிகள் ரெயில், இரவு 08.25 மணிக்கு வாஞ்சி மணியாச்சியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பயணிகள் ரெயில், இரவு 10.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து வாஞ்சி மணியாச்சி செல்லும் பயணிகள் ரெயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும், சில ரெயில்கள் புறப்படும் இடமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரெயில் இன்று மாலை 5.15 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். சென்னை செல்லும் முத்துநகர் விரைவு ரெயில் இரவு 8.25 மணிக்கு மீளவிட்டானில் இருந்து புறப்படும். தூத்துக்குடி-பாலக்காடு விரைவு ரெயில் இரவு 10 மணிக்கு மீளவிட்டான் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
thoothukudi trains cancelled for rain