தூத்துக்குடி: விஏஓ கொலை வழக்கு குற்றவாளிகளின் ஜாமின் மனு! அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!
Thoothukudi VAO Hacked to Death Case Culprit Bail Case
தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் விஏஓ லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில், இடைக்கால ஜாமின் கோரிய குற்றவாளிகளின் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த ஆண்டு, ஏப்ரல் மாதம் கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ், அலுவலகத்தில் வைத்தே படுகொலை செய்யப்பட்டார்.
மணல் கடத்தல் சம்பவத்தை தடுத்து நிறுத்த முயன்றதால், அரசியல் கட்சியின் நிர்வாகி உள்ளிட்ட இரண்டு பேர் அவரை அலுவலகத்தில் புகுந்து கொடூரமாக வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் கொலை செய்த குற்றவாளிகள் ராமசுப்பிரமணியன், மாரிமுத்து ஆகியோருக்கு ஆயில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
இந்த நிலையில், இந்த தண்டனையை நிறுத்தி வைத்து, இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என்று, இருவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, மணல் கடத்தல் குறித்து புகார் அளித்த கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்த நீதிபதிகள், கொடூரமான இந்த குற்றத்தின் தன்மை கருதி மனுதாரர்களின் (கொலை குற்றவாளிகளின்) இடைக்கால ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவிட்டனர்.
English Summary
Thoothukudi VAO Hacked to Death Case Culprit Bail Case