பா.ஜ.க. தலைவர் பதவிக்கு மல்லுக்கட்டும் அந்த நான்குபேர்.. தலைவரை தேர்வு செய்வதில் தொடரும் இழுபறி! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் தற்போதைய தலைவரான செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரும் பா.ஜ.க மாநில தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.இதனால்  தலைவரை நியமிக்க  முடியாமல் இழுபறி நீடிப்பதாக தெரியவந்துள்ளது.

 அமைப்பு தேர்தல் நடத்தப்பட்டு பா.ஜ.க.வுக்கு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் புதிய மாநில தலைவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழகம், புதுச்சேரியில் தொகுதி, மாவட்டம், அணி அளவில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் புதுச்சேரி, தமிழகத்தில் மாநில தலைவரை தேர்வு செய்வதில் 2 மாநிலங்களிலும் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. மேலும் இன்னும் ஓராண்டில் வரஇருக்கிற சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலையில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலான ஒரு மாநில தலைவரை நியமிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தலைமை உறுதியாக உள்ளது.

சமீபத்தில் புதுச்சேரியில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆளும்கட்சியாக இருந்தும் பா.ஜ.க. வேட்பாளராக களம் இறங்கிய அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியை சந்தித்தார். இது வரும் சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமோ? என பா.ஜ.க. தலைமை அஞ்சுகிறது .இதனால் கட்சியை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிக்க வேண்டும் என பா.ஜ.க. டெல்லி தலைமை தொடர்ந்து ஆலோசித்து வருகிறது.

இந்தநிலையில் பா.ஜ.க. தலைவர் பதவிக்கு நமச்சிவாயம் பொருத்தமாக இருப்பார். ஆனால் அவர் அமைச்சர் பதவியோடு, தலைவர் பதவியை அளித்தால் ஏற்க தயார் என தலைமைக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.பா.ஜ.க.வை பொறுத்த வரை ஒருவருக்கு ஒரு பதவி என்ற விதி உள்ளது. இதனால் விதியை வளைத்து மாநில தலைவர் பதவி வழங்க கட்சி தலைமை ஆலோசித்து வருகிறது என கூறப்படுகிறது . 

மேலும்  புதுச்சேரியில் தற்போதைய தலைவரான செல்வகணபதி எம்.பி., அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், நியமன எம்.எல்.ஏ.க்கள் அசோக் பாபு, வி.பி.ராமலிங்கம் ஆகியோரும் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

கடந்த 20-ந் தேதியே புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்திருந்தன. ஆனால் ஒரு வாரமாகியும் இதுவரை மாநில தலைவர் நியமிக்கப்படவில்லை. அனைவரும் ஏற்கும்படிஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்பதால் இந்த இழுபறி நீடிப்பதாக தெரியவந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் புதுச்சேரி மாநில பா.ஜ.க. தலைவர் தேர்வு செய்து அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Those four people are fighting for the post of BJP president. The tussle over the selection of the leader continues


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->