அதிரடி - தமிழகத்தில் 3 வெளிமாநில ஆம்னி பேருந்துகள் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அகில இந்திய சுற்றுலா அனுமதி பெற்ற வெளிமாநில பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை அனுமதி மறுத்தது. இதை தொடர்ந்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில், அவர்களுக்கு 18-ந் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டது. 

இந்த நிலையில் அந்த காலக்கெடு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்ததால், தமிழகத்தில் விதிகளை மீறி இயக்கப்படும் வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளில் பயணிகள் பயணம் செய்ய வேண்டாம் என்றும், விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருடந்துகளை பறிமுதல் செய்யவும் உத்தரவிடப்பட்டது.

அந்த உத்தரவின் படி கோவை இணை ஆணையர் மேற்பார்வையில் கோவையில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் கோவையில் பத்து இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

அதில், கோவையில் இருந்து சென்னைக்கு இயக்கிய நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட 2 பேருந்துகளை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அகில இந்திய சுற்றுலா அனுமதி சீட்டு பெற்ற பேருந்து என்பதும், விதிகளை மீறி மாநிலத்துக்குள் இயக்கப்பட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த 2 ஆம்னி பேருந்துகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், கோவையில் இருந்து பெங்களூருவுக்கு இயக்கப்பட்ட நாகலாந்து மாநில பதிவெண் கொண்ட மற்றொரு பேருடந்த்தும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த 3 பேருந்துகளும் கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three amni bus seized in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->