குளத்தில் குளிக்கச் சென்ற 3 சிறுமிகள் உயிரிழப்பு - தொண்டி அருகே சோகம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி அருகே பாசிப்பட்டிணம் பகுதியைச் சேர்ந்த சித்திரவேல் என்பவரின் மகள் வைத்தீஸ்வரி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகள் பிரீத்தி மற்றும் நாயகம் என்பவரது மகள் நர்மதா உள்ளிட்டோருடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளார்.

அங்கு மூன்று சிறுமிகளும் சேற்றுடன் இருந்த ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். மூன்று பேருக்கும் நீச்சல் தெரியாததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு நீரில் மூழ்கினர். இதைப்பார்த்த மற்ற சிறுமிகள் கத்திக் கூச்சலிட்டனர்.

இதைக்கேட்டு ஓடை வந்த அக்கம் பக்கத்தினர் மூன்று சிறுமிகளையும் மீட்டு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் சென்ற நிலையில், அங்கே அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே வைத்தீஸ்வரி மற்றும் ப்ரீத்தி ஆகிய இரண்டு சிறுமிகள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

சிறுமி நர்மதா உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three girls died for drowned water in thondi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->