தீவிரம் காட்டும் பறக்கும் படை - திண்டுக்கல் அருகே 3 கிலோ தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ளதால், நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. அதனால், தேர்தல் பறக்கும் படை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் நேற்று இரவு வத்தலகுண்டு அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தேனியில் இருந்து மதுரை நோக்கி சென்ற வேனை மறித்து சோதனை செய்தனர். 

அதில் வேனில் மொத்தம் 3 கிலோ 600 கிராம் தங்க நகைகள் மற்றும் 500 கிராம் வெள்ளி நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வேனில் வந்த நபர்களிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மதுரையில் உள்ள 3 நகைக்கடைகளுக்கு அந்த நகைகளை கொண்டு செல்வதாக வேனில் வந்தவர்கள் கூறினர். 

ஆனால் நகைகளை கொண்டு செல்வதற்கு உரிய அனுமதி பெறாமல் வேனில் நகைகளை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து பறக்கும் படையினர் நகைகளை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three kg gold seized in vaththalakundu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->