பிரியாணி வாங்கச் சென்ற வாலிபர் - பிணமாக வீடு திரும்பிய சம்பவம்.!
three peoples died for murder case in chennai
பிரியாணி வாங்கச் சென்ற வாலிபர் - பிணமாக வீடு திரும்பிய சம்பவம்.!
சென்னையில் மண்ணூர்பேட்டையில் மதுபானக் கடை அருகே பிரியாணி கடை ஒன்று உள்ளது. இந்தக் கடையில் கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த பாலா என்பவர் பிரியாணி வாங்க சென்றுள்ளார்.
அப்போது பிரியாணி வாங்க வந்த அயனாவரம் பகுதியைச் சேர்ந்த நெப்போலியன் உள்ளிட்ட சிலர் மீது பாலா எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த நெப்போலியன் உள்ளிட்ட சிலர் பாலா உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த நேரத்தில், மது போதையில் இருந்த ஒரு நபர் பாலாவை தன வைத்திருந்த அரிவாளால் வெட்டிப் படுகொலை செய்துள்ளார். அதன் பின்னர் அவர்கள் மூன்று பெரும் அங்கிருந்தது தப்பித்துச் சென்றுவிட்டனர்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
அதன் படி போலீசார் விரைந்து வந்து பாலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகள் மூவரையும் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
three peoples died for murder case in chennai