விவசாயிகளுக்கு விரைவில் மும்முனை மின்சாரம்! அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.!
Three phase line for agriculture
விரைவில் மும்முனை மின்சாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின் கீழ் தற்போது வரை 87 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதம் உள்ளவர்களுக்கு இம்மாத இறுதிக்குள் இலவச மின்சாரம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கடந்த ஆட்சியில் மும்முனை மின்சாரம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கப்படவில்லை என்றும் தற்போது முதலமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில் மும்முனை மின்சாரம் வழங்க தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என்றும் பின்னர் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும் டெந்தில் பாலாஜி தெரிவித்தார்.
English Summary
Three phase line for agriculture