ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்த 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு.! - Seithipunal
Seithipunal


ஊரகப் பகுதிகளின் தரத்தை மேம்படுத்த மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கான ரூ.3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஊரகப் பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி மேம்படுத்தவும், மண் அரிப்பைத் தடுப்பதற்காக ரூபாய் 683 கோடி மதிப்பீட்டில் 10000 தடுப்பணைகள் மற்றும் 5000 பண்ணை குட்டைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைப்படுத்தவவும், குக்கிராமங்களில் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் சென்றடைவதற்கு ரூபாய் 1346 கோடி மதிப்பில் சுமார் 4000 கிலோமீட்டர் தொலைவிற்கு சாலைகள் அமைக்கப்படும் என்றும், ஊரகப் பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மறுசுழற்சி மற்றும் மறுபயன்பாடு செய்வதற்காக 350 கிலோ மீட்டர் தொலைவில் வடிகால் வசதி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஊரக பகுதிகளை பசுமை ஆகவும் சூழலை பாதுகாக்கவும் ரூபாய் 293 கோடி மதிப்பீட்டில் 69 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்றும், ஊட்டச்சத்து மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்படும்.

மேலும் ரூபாய் 92 கோடி மதிப்பில் மகளிர் பங்களிப்பை உயர்த்தவும், சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மூலம் முருங்கை மற்றும் தோட்டக்கலை நாற்றங்கால் மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Three thousand crore allocation for rural development


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->