ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் போட்ட இளம்பெண்கள் - போலீசார் விசாரணை.!  - Seithipunal
Seithipunal


சமீப காலமாகவே சமூக வலைத்தளங்களில் நடனமாடி வீடியோ போட்டு வருகின்றனர். அந்த வகையில், திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் மூன்று இளம்பெண்கள் ஜே.ஜே. திரைப்படத்தில் உள்ள 'மே மாதம் 98-ல் மேஜர் ஆனேனே' என்ற பாடலுக்கு நடனமாடி அமர்களப்படுத்தியுள்ளனர்.

சமூக வலைதளத்தில் இளம்பெண்களின் ரீல்ஸ் வீடியோ பலரையும் ரசிக்க வைத்துள்ளது. இருப்பினும், அரசு கட்டிடம் மற்றும் பொது இடங்களில் தனிப்பட்ட முறையில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முறைப்படி அனுமதி பெற வேண்டும்.

அதிலும் றிப்பாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம், விமான நிலையங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற்றே நடத்தப்படும். ஆனால் இந்த இளம்பெண்கள் எந்தவித முன் அனுமதியும் இன்றி ரெயில் நிலையத்தில் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three womans dance reels in trichy kottai railway station


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->