சினிமாவை மிஞ்சும் த்ரில் சம்பவம்!...என் காரையே நிறுத்துவீங்களா!...போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கும்பலில் 13 பேர் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


கடந்த 15-ம் தேதி திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை அருகே இரவு நேரத்தில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரூர்-திருச்சி சாலையில் கார் மூலம் நாட்டு துப்பாக்கிகள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகளுடன் சிலர் வருவதாக போலீசாருக்கு கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போலீசார் ஒரு காரை மறித்து நிறுத்திய போது, காரில் இருந்து இறங்கிய ஒரு நபர் போலீசாரை பார்த்து நான் பெரிய ரவுடி என்றும், நான் குமுளி ராஜ்குமார் என் காரையே நிறுத்துவீங்களா என கேட்டு போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.

தொடர்ந்து இது குறித்து தகவலறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாரின் தனிப்படை போலீசார் பரமக்குடி அருகே ஆதி ஏந்தல் பகுதியில் குமுளி ராஜ்குமார், கரூர் மாவட்டம் குளித்தலையைச் சேர்ந்த இன்கானூர் பாலு  ஆகிய 2 பேரை கைது செய்து, காரில் 2 நாட்டு துப்பாக்கிகள், 25 சணல் வெடிகள்,2 வீச்சரிவாள் ஆகியவற்றை கைப்பற்றினர்.

இதற்கிடையே, கைதான குமுளி ராஜ்குமார் மீது ஏற்கனவே 5 கொலை வழக்கு, தலா 2 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், குமுளி ராஜ்குமாரின் ஆதரவாளர்களான மாகாளிக்குடி அலெக்ஸ், அருண், சமயபுரம், ராமு, லட்சுமணன், துறையூர், வெங்கடாசலபதி,கணேசன், விநாயகமூர்த்தி, வள்ளி அருணன், கார்த்திக் ஆகிய 9 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.

இதே போல், சக்திவேல், குளித்தலை பொன்னடி, சங்கீத்குமார் ஆகிய 3 பேரை முசிறி போலீசாரும், சோமரசம்பேட்டையில் கோபி என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thrill incident surpassing the cinema will you stop my car 13 people were arrested in the rowdy gang who threatened to kill the police


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->