வெண்தொழுநோயை குணமாக்கும் ஸ்தலம் - எந்த ஊரில் உள்ளது? - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவிடைமருதூர் தாலுகா துக்காச்சி கிராமத்தில் அமைந்துள்ளது சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வர சுவாமி கோயில். சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில் சுமார் 7 ஏக்கரில் மாமன்னர் ராஜராஜசோழனின் மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டுள்ளது.

இந்தக் கோவில் தீராத வெண்தொழுநோயால் அவதிப்பட்டு வந்த மன்னன், அதனைப் போக்க பரிகாரம் தேடி பல சிவாலயங்களுக்கு சென்று இறைவனை வழிபட்டார். அந்தச் சமயத்தில் அரசனின் கனவில் அருள்மிகு ஆபத்சகாயர் தோன்றி, தன்னை 48 நாள்கள் வழிபட்டு வந்தால் வெண்தொழுநோய் மறையும் என்று அருளினார். இறைவனின் வாக்கின் படி மன்னன் தம் படையுடன் கிளம்பினார்.

அதன் படி பாதிரி வனம் நோக்கி வருகையில் இரவாகிவிடவே, மன்னன் படையுடன் அருகிலிருந்த ஊரிலேயே தங்கினார். அப்போது மீண்டும் ஆபத்சகாயேஸ்வரரான இறைவன் மன்னனின் கனவில் தோன்றி மன்னன் தங்கியுள்ள இடத்திலிருந்து ஒரு கல் தொலைவில் தாம் உள்ளதாக கூறினார். சூரியன் உதயமானதும் மன்னன் எழுந்து நீராடி பாதிரிவனம் வந்து ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரரைக் கண்டு மகிழ்ந்து, தினமும் ஏழு சுற்றுகள் 48 நாள்கள் வலம் வந்து இறைவனைத் தொழுதார்.

மேலும், ஈசனை வழிபடுவதற்கு உகந்த இலைகளில் ஆறு இலைகளை தினமும் உண்டு வந்தார். ஆபத்சகாயேஸ்வரரின் அருளால் வெண் தொழுநோய் நீங்கப்பெற்றார். இதனால் மனம் மகிழ்ந்த மன்னன் அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரரின் ஆலயத்தை கற்றளி கொண்டு மிக பிரமாண்டமாக அமைத்தார் என்பது வரலாறு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thukkachi apadsakayeswarar temple


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->