சுற்றுலா பயணிகளே ரெடியா : 8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் சுற்றுலா குளிக்க தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது தடையை நீக்கி சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

 தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களில் கடந்த வாரம் கன மழை பெய்து வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் ஒரு சில பகுதிகளில் அதிக கனமழையும் பெய்தது. அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்ப்பரப்பு அருவிக்கு தண்ணீர் அதிகம் வர தொடங்கியதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தது.

 கோடை காலம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் குளிர்ச்சியான பகுதிகளுக்கும் அருவிகளுக்கும் சென்று கோடை விடுமுறையை கழிப்பது வழக்கம். ஆனால் சமீப நாட்களாக கோடையில் கன மழை பெய்து வருகிறது. சமீபத்தில் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் அருவில் தண்ணீர் மலைபோல் கொட்டு கிறது.

 பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் அதிக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலா தளங்கள் காலியாக காட்சியளிக்கிறது.

 இந்த நிலையில், மழை குறைந்துள்ளதாலும் அருவியின் நீர்வரத்து குறைந்துள்ளதாலும் 8 நாட்களுக்கு பிறகு திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகன் அறிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirparappu waterfalls tourist bathing allowed


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->