திருநெல்வேலி-தாம்பரம் சிறப்பு ரெயில் ஜனவரி வரை நீட்டிப்பு; தெற்கு ரெயில்வே தகவல்! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி-தாம்பரம் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த ரெயில் சேவை ஜனவரி மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரெயில், இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும்.

மேலும், நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும். இந்த ரெயில் திங்கட்கிழமை காலை 9.20 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.

இதனை போன்றே, தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலிக்கு வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு 10.20 மணிக்கு சிறப்பு கட்டண ரெயில் புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி சென்றடைகிறது.

இந்த ரெயில் வருகின்ற 19, 26 ஆகிய தேதிகளிலும் , அக்டோபர் மாதம் 3, 10, 17, 24, 31 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதம் 7, 14, 21, 28 தேதிகளிலும் , டிசம்பர் மாதம் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதம் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

இந்த ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. தென்மாவட்டத்திற்கு செல்லக்கூடியவர்கள் சிறப்பு ரெயிலில் முன்பதிவு செய்து கூட்ட நெரிசல் இல்லாமல் பயணிக்கலாம்". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli to Thambaram special train extended till January


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->