தேர்தல் விதிக்கு உட்பட்டு தரிசன டிக்கெட் விநியோகம் - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதற்கிடையே, தமிழ்நாட்டில் முதற்கட்டமாக ஒரே கட்டத்தில் ஏப்ரல் மாதம் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினமே விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் அன்றே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மாநிலம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன.

அதன் படி திருப்பதி தேவஸ்தானம் தேர்தல் நடத்தை விதிக்கு உட்பட்டு தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு தரிசன டிக்கெட், அறைகள் வசதி செய்து தரப்படும்.

நேரில் வரும் தகுதி வாய்ந்த பக்தர்கள் அவர்களது குடும்பத்திற்கு மட்டும் டிக்கெட் தரப்படும். தேர்தல் விதிமுறை அமலால் முக்கிய பிரமுகர்களின் பரிந்துரை மற்றும் கடிதங்களின் பெயரில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட், தங்கும் அறைகள் ஆகியவற்றை ஒதுக்கீடு செய்ய இயலாது" என்று தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tirupati devasthanam distribute dharisanam tickets of election rules


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->