திருப்பத்தூர் | வாகனத் திருட்டில் ஈடுபட்ட 2 ஆசாமிகள்! போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal



திருப்பத்தூர், வாணியம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து வாகன திருட்டு திருட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 5 லட்சம் மதிப்பிலான 11 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளது. 

திருப்பத்தூர், வாணியம்பாடி நகரம் மற்றும் சுற்றுலா தாரா பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதாக நகர் காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்தது. 

இதனை அடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் வாணியம்பாடி-பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த ஐயப்பன் (வயது 28) அரவிந்த் (வயது 24) விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் இருவரையும் போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தியதில் பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. 

இதனை அடுத்து இருவரிடம் இருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 11 இரு சக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirupattur vehicle theft 2 people arrested


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->